டிராவிட் என்ற சகாப்தத்தின் வாழ்க்கை

0

1996ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் தனது அறிமுக போட்டியில் 95ரன்கள் அடித்தபோதும் அதிகம் கவனிக்கப்பட்டது அதே போட்டியில் அறிமுகமாகி சதம் விளாசிய கங்கூலி, 1999ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 374ரான்கள் விளாசிய போட்டியில் அடித்தது 153ரன்கள் ஆனால் அதிகம் கவனம் ஈர்த்தது அதே போட்டியில் சச்சின் அடித்த 183ரன்கள் தான், இப்படி தன் மகத்தான கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவும் தனக்குரிய அங்கீகாரத்தை பெறாமலேயே ஓய்வு பெற்றவர் இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று புகழப்படும் ராகுல் டிராவிட்டின் 43ஆவது பிறந்தநாள் இன்று.

நேர்த்தியான ஷாட்டுகள், எதிரணி வீரர்களையும் மதித்து நடக்கும் பண்பு, அணிக்காக எதையும் செய்யும் தியாக உணர்வு போன்றவை டிராவிட்டின் புகழை கிரிக்கெட் இந்த உலகத்தில் இருக்கும் நிலைகொள்ளசெய்யும்.

இன்று கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் டிராவிட் என்ற சகாப்தத்தின் வாழ்க்கை பயணத்தை கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பிறந்தது

1973ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்துள்ளார் ராகுல் டிராவிட். பின் சிறு வயதிலேயே தந்தையின் பணிமாறுதல் காரணமாக பெங்களூருவுக்கு டிராவிட்டின் குடும்பம் குடிபெயர்ந்தது.

இவரின் தந்தை ‘ஜாம்’ எனப்படும் பழப்பசை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியில் இருந்ததால் ‘ஜாமி’ என்ற புனைபெயர் டிராவிட்டுக்கு இருந்துள்ளது.

இந்தூர்:

டிராவிட் பிறந்த இந்தூர் அவ்வளவாக சுற்றுலாத்தலங்கள் இல்லாத ஒரு நகரமாகும். இங்கே குறிப்பிட்டு சொல்லக்கூடிய இடங்கள் என்றால் பாதாள்பானி என்ற அருவி, படா கணபதி கோயில், கஞ்ச்மந்திர் என்ற அரண்மனை போன்றவை தான்.

வளர்ந்தது:

டிராவிட்டின் குடும்பம் சிறு வயதிலேயே பெங்களூருவுக்கு வந்துவிட்டதன் காரணமாக தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூருவில் உள்ள புனித ஜோசெப் கல்வி நிறுவனத்தில் தான் முடித்துள்ளார். 1992இல் MBA படிப்பை மேற்கொள்ளும் போது தான் கர்நாடக மாநில அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆட ஆரம்பித்தார் டிராவிட்.

இன்றும் பெங்களூருவின் செல்லப் பிள்ளையாக டிராவிட் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

சின்னசுவாமி ஸ்டேடியம்:

இந்தியாவில் உள்ள சிறந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இருப்பது பெங்களூருவில் இருக்கும் சின்னசுவாமி மைதானம் ஆகும்.

இங்கு நடந்த 12வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியிலிருந்துதான் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பமாகியிருக்கிறது.

கொல்கத்தா:

ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்த போட்டியென்றால் அது 2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வி.வி.எஸ்.லக்ஷ்மணனனுடன் இணைந்து 375ரன்கள் குவித்தது தான்.

கொல்கத்தா:

ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்த போட்டியென்றால் அது 2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வி.வி.எஸ்.லக்ஷ்மணனனுடன் இணைந்து 375ரன்கள் குவித்தது தான்.

Advertisements