2015 இன் கனவுக்கன்னி யார்?….சர்வே முடிவு!


2015 முடிவை நெருங்கிவிட்டது. 2015ம் வருடமும் பல நடிகைகளுக்கு அதிர்ஷ்டமாக அமைந்து, சில நடிகைகளுக்கு எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்தது. பல புது ஹீரோயின்களையும் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், அதிகப் படங்கள் மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர்கள் வட்டம், நடிப்பு, என 2015ம் ஆண்டின் கனவுக் கன்னி யார்? என்ற கேள்வியுடன் சினிமா விகடனில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நயன்தாரா அதிக வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

‘மாயா’, ‘மாஸ்’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரவுடிதான்’ என நயன்தாராவுக்கு இந்த வருடம் அமைந்த படங்களும் ஒரு காரணம். முக்கியமாக நானும் ரவுடிதான், மாயா போன்ற படங்கள் 60 சதவீதம் நயன்தாராவை மையப்படுத்தியே வெளியான படங்கள். இதன் காரணமாக சேலத்தில் கடைத்திறப்பு விழாவின் போது ஊரையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு நயன்தாராவைக் காண கூட்டம் குவிந்தது.

ஒரு நடிகையின் வரவிற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது என்றால் அதுவே முதல் முறை எனலாம். கருத்துக்கணிப்பிலும், நயன்தாரா 49.5 சதவீத வாக்குகளுடன் 2015ம் ஆண்டின் கனவுக் கன்னியாக முதலிடத்தில் இருக்கிறார்.

மற்ற நடிகைகள் பிடித்துள்ள இடமும் வாக்குகளின் சதவீதமும்.

1. நயன்தாரா 45.5%

2. சமந்தா 11%

3. ஸ்ரீதிவ்யா 8%

4. அனுஷ்கா 7%

5. எமி ஜாக்சன் 5%

6. த்ரிஷா 4%

7. ஹன்சிகா 4%

8.ஸ்ருதி ஹாசன் 4%

9. காஜல் அகர்வால் 3%

10. லட்சுமி மேனன் 3%

11. தமன்னா 2%

— Courtesy Ananda Vikatan

Advertisements