ஒவ்வொரு விடியலும் உன் நினைவுகளுடன்…!

காதல் ஒரு போர்.. தொடங்குவது எளிது.. முடிப்பதுதான் ரொம்பக் கஷ்டம்..

08-love-romance-300-300

சின்னக் குழந்தைகளைப் பார்த்திருப்போம்… மனசில் எந்தக் கவலையும் இருக்காது, கையில் கிடைத்த பொருட்களை வைத்துக் கொண்டு படு சீரியஸாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். எந்த கமிட்மென்ட்டும் கிடையாது.. ஜாலி ஜாலி ஜாலிதான்… அதுபோலத்தான் காதலும்.. ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்ததுமே, இன்று என்ன செய்யலாம், எப்படியெல்லாம் குஷிப்படுத்தலாம், எப்படியெல்லாம் பூஜிக்கலாம் என்ற சிந்தனதான் ஒவ்வொரு காதலனுக்கும், காதலிக்கும். ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக ஆரம்பிக்கிறது உன் நினைவுகளுடன் இதயத்தின் அடி ஆழத்தில் உன் நினைவுகள் என்றென்றும் தேங்கிக் கிடக்கும் ..பசுமையாய்…! காதல் கொண்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலையும் சுகமாகவே விடிகிறது. காரணம், அடுத்த 12 மணி நேரத்திற்கு காதலன் அல்லது காதலியுடன் பேசிக் கொண்டிருக்கலாம் அல்லது பார்த்துக் கொண்டிருக்கலாமே… இந்த 12 மணி நேரத்தில் எப்படியெல்லாம் காதலன் அல்லது காதலியைப் புகழ்வது, சந்தோஷப்படுத்துவது என்று முதல் நாள் இரவு முழுவதும் யோசித்து யோசித்துக் களைத்தே போயிருப்பார்கள்.. ஆனால் மனசு மட்டும் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். இரு கரம் பற்றி என்னை ஆசிர்வதிக்கும் தேவதையே.. உன் அன்புக் கரத்திற்குள் சிக்கி திக்குமுக்காடிப் போயிருக்கிறேன்.. இந்த இன்பம் ஒன்று போதும் இப்பிறவியை முடிக்க… ஒவ்வொரு காதலனுக்கும் அவனது காதலி தேவதைதான். கண்ணுக்குத் தெரியாதவள்தான் தேவதை… அதுபோலத்தான் இந்த காதலியும். தூர இருந்தாலும், அருகே இருந்தாலும், எப்போதும் மனதோடு வந்தமர்ந்த வாசமலர்தான் காதலி. நம்பிக்கை அனைத்தையும் சாத்தியமாக்குகிறது நம்பிக்கை அனைத்தையும் செய்ய வைக்கிறது காதல் எல்லாவற்றையும் அழகாக்குகிறது.. காதல் என்பதும் கூட ஒரு வகையில் நம்பிக்கைதான். என் மனம் உனக்கு, உன் மனம் எனக்கு என்பது கூட ஒருவகையில் உடன்பாடுதான். பரஸ்பரம் நம்பிக்கையில்தான் எல்லாக் காதல் கோட்டைகளும் கட்டப்படுகின்றன. உன் கண் பார்த்த பிறகு நிலவை ரசிக்க என்னால் முடியவில்லை சூரியனைப் போல சுட்டெரித்தாலும் கூட மனதை வந்து தொடும்போது குளிர் தென்றலாய்.. பால் நிலவின் பண்புடன் ஜில்லென்றுதானே தாக்குகிறது… காதலுக்குப் பெரிய சக்தியே இதுதான். எதையுமே பாசிட்டிவாக சிந்திப்பது, எப்போதுமே காதலுடன் இருப்பது… இதுதான் ஒவ்வொரு காதலனையும், காதலியையும் ஊக்கப்படுத்தி அன்று முழுவதும் நடமாட உதவுகிறது. இன்றைய பொழுதை நீ நன்றாக கழிக்க வேண்டும். உனது வேலைகளை சிறப்பாக செய்ய வேண்டும், உன் உடல் நலம் அருமையாக இருக்க வேண்டும், உனது கஷ்டம் யாவும் பகவலவனைக் கண்ட பனியைப் போல ஓடிப் போக வேண்டும், இவையெல்லாம் நடக்க உன் கூடவே நான் இருக்கிறேன், இருப்பேன் என்றுதான் ஒவ்வொரு காதலன் அல்லது காதலியின் வேண்டுதலாக இருக்கிறது. காதல் இரு இதயங்களின் மோதல் யார் வென்றாலும் லாபம் இருவருக்கும்தான்… உண்மையான வார்த்தை இல்லையா.. காதலைப் பொறுத்தவரை எந்த ஒரு மோதலும், சண்டையும், வாக்குவாதமும், கோபமும், சலசலப்பும் அபரிமிதமான அன்பின் வெளிப்பாடு என்று உளவியல் நிபுணர்களே கூறியுள்ளனர். ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பு அதிகமாகும் போது அவர்கள் அதை வெளிப்படுத்தத் துடிக்கிறார்கள். அவர்களது அன்புக்குரியவர்களிடம் சின்ன மாற்றம் தெரிந்தாலும் கூட அதை அவர்கள் எளிதில் உணர்ந்து வாடிப் போய் விடுகிறார்கள். அதைத்தான் இப்படி சின்னச் சின்னச் கோபமாக வெளிப்படுத்துகிறார்கள்… ஆனால் அந்தக் கோபம் கூட சில நொடிகளில் ஓடிப் போய் விடும்.. காரணம், காதல் என்பது உளவியலாளர்களின் கருத்து. காதல் ஒரு போர்.. தொடங்குவது எளிது.. முடிப்பதுதான் ரொம்பக் கஷ்டம்.. நிச்சயமாக, ஒவ்வொரு காதலும் போர் போலத்தான். ஆனால் இது அன்புப் போர், அகிம்சைப் போர், இதயங்களின் போர், அன்பையும், ஆறுதலையும் கைப்பற்ற நடக்கும் போர். நிச்சயம் இதை எளிதாக தொடங்கி விட முடியும், ஆனால் முறிப்பதும், முடிப்பதும் இயலாத காரியம். உன்னை என் இறுதி மூச்சு வரை வாசிப்பேன்.. முடிவே இல்லாத நீண்ட நெடிய புத்தகம் நீ… என்பது காதலர்கள் ஒவ்வொருவரும் வேதம் போல சொல்லும் வார்த்தை.. காதலித்தவரை மறக்க நினைப்பது இதுவரை பார்த்தேயிராத ஒருவரை நினைக்க முயல்வது போல.. உண்மைதான்.. என்னை நீ மறந்து போ என்று கூற முயல்வது, இதுவரை பார்த்திராத ஒருவரை நினைக்க முயல்வது போலத்தான்.. காதலை உள்ளத்திற்குள் உள் வாங்கிக் கொண்ட பின்னர் எத்தனை சுனாமிகள் வந்தாலும் அதைத் தூக்கிப் போட்டு விட முடியாது… காரணம், காதலின் வலிமை அப்படி, எண்ணங்களின் சக்தி அப்படி… ஒவ்வொருவரும் காதலில் மூழ்க வேண்டும், காதலித்து வாழ வேண்டும்…!

Read more at: http://tamil.oneindia.in/art-culture/essays/2013/always-with-your-memories-169416.html

Advertisements

2 thoughts on “ஒவ்வொரு விடியலும் உன் நினைவுகளுடன்…!

 1. சூப்பர்…இது உங்களிடத்தில் இருந்தா புறப்பட்டு இங்கு பரிமாணமாகிறது…ஆச்சர்யம் தான் ஒரு இளம் வெப் டிசைனரிடம் இருந்தா இத்தனை கொள்ளைக்கொள்ளையா காதல்..யார் அந்த பாக்கிய சாலி..
  இதோ என்னை சுண்டிய சில வரிகள்:
  மனதோடு வந்தமர்ந்த வாசமலர்தான் காதலி. நம்பிக்கை அனைத்தையும் சாத்தியமாக்குகிறது நம்பிக்கை அனைத்தையும் செய்ய வைக்கிறது காதல் எல்லாவற்றையும் அழகாக்குகிறது.. காதல் என்பதும் கூட ஒரு வகையில் நம்பிக்கைதான். என் மனம் உனக்கு, உன் மனம் எனக்கு என்பது கூட ஒருவகையில் உடன்பாடுதான்.

  அருமை அருமை…எல்லாமே ஒரு கொடுக்கல் வாங்கள் தான்..

 2. சூரியனைப் போல சுட்டெரித்தாலும் கூட மனதை வந்து தொடும்போது குளிர் தென்றலாய்..
  காதல் …அது ஒரு தனி உணர்வு..இது இல்லாத வாழ்க்கை ஒன்றுமே இல்லை… சுட்டெரிக்கும் வெயிலில் காதலர்கள் நடந்தாளும்…. மனதென்னவோ குளிர்ந்த தென்றலை தழுவிக்கொண்டதைபோலத்தான்..

  முடிவே இல்லாத நீண்ட நெடிய புத்தகம் நீ……வாவ்…சூப்பர் ராம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s