இப்படியும் ஒரு நாட்டு அதிபர்

இப்படியும் ஒரு நாட்டு அதிபர் இந்த உலகத்துல இருக்கிறார்.. நம்புங்கள் ப்ளீஷ்

லண்டன்: பொதுவாக அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டாலே ஆடம்பரமான அளப்பரை வாழ்க்கையை வாழத் தொடங்கிவிடுவர்…அரசுப் பொறுப்புக்கு போய்விட்டால் சொல்லவே வேண்டியது இல்லை..ஆனால் ஒரு நாட்டுக்கே அதிபராகிவிட்டாலும் எளிமையாக வாழுகிற ஒரு அதிசய மனிதரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடருங்கள்….

 • வண்டு முருகன்களின் வாலாட்டம்
 • ஒரு கட்சியில் வட்டச் செயலாளராகிவிட்டாலே நம்மூர் வண்டு முருகன்கள் சில்லு வண்டுகளெல்லாம் காட்டுற பந்தா இருக்கே.. அடேங்கப்பா… எளிமையாக வாழ்ந்த பெரியார், கக்கன், காமராஜர் எங்கே.. இவங்களெல்லாம் எங்கே பெருமூச்சு விடுபவரா நீங்கள்… இந்தப் படத்தில் உள்ளவரை நன்றாகப் பாருங்கள்.. இவர் பெயர் ஹோஸே முயீகா. இவர் தென் அமெரிக்க நாடான உருகுவேயின் இப்போதைய அதிபர்.. இவர் எப்படியான வாழ்க்கை வாழ்கிறார் என்பதை அறிய அடுத்த பக்கங்களைப் புரட்டுங்கள்

 • உருகுவே அதிபராக முயீகா

 • 2009-ம் ஆண்டு உருகுவே நாட்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார் ஹோஸே முயீகா. அப்போது இவர் அதிரடியாக அறிவித்த முதல் விஷயம்… அதிபருக்கான வழக்கமான மாளிகையே எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்… அப்புறம் எங்க போனார்? மாளிகையை மட்டுமல்ல.. ஆள். அம்பு. சேனை என எந்த ஒரு பட்டாளத்தையும் வைத்துக் கொள்ளவில்லை.. உருகுவே நாட்டு அதிபராகிவிட்ட பிறகு அவர் வாழ்ந்த இடம் எங்கே தெரியுமா? நெக்ஸ்ட் பேஜ் கிளிக் செய்யுங்கள்

 • இங்கே ஒரு நாட்டு அதிபர் வசிக்கிறார்.

 • கோரைப் புற்கள் களையோடு களைகட்டி வளர்ந்திருக்க.. நட்ட நடுவே ஒரு தகரக் கொட்டகை… காயம்பட்ட ஒரு நாய்.. வீட்டுக்கு வெளியே காயப் போட்டிருக்கும் துணிமணிகள்… இங்குதான் உருகுவே நாட்டு அதிபர் முயீகா வாழ்ந்து வருகிறார்…. இவரது பாதுகாப்புக்கு 2 போலீசார் மட்டும் காவல்! இந்த வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கூட கிடையாது. கிணற்று தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்

 • எதற்காக இப்படி ஒரு வாழ்க்கை?

 • நான் தேர்வுசெய்த வாழ்க்கை முறை இது. என்று சொல்கிறார் ஹோஸே முயீகா. இவர் வாழும் குடில் மனைவியின் பண்ணை நிலம்.. இங்கே மலர்களை கணவனும் மனைவியும் வளர்க்கின்றனர். 1960களில் கியூபா புரட்சி நடைபெற்ற போது தாமும் இடதுசாரியாகி 14 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார். இந்த கம்யூனிச சிந்தனை இப்போதும் கூடவே வந்திருக்கிறது.

 • சம்பளத்தை என்ன செய்கிறார்?

 • உருகுவே அதிபர் என்ற பதவிக்காக இவருக்கு கிடைக்கும் 12 ஆயிரம் டாலரை என்ன செய்கிறார் தெரியுமா? இதில் 90 விழுக்காட்டை சமூக நலப் பணிகளுக்காக அள்ளிக் கொடுத்துவிடுகிறாராம். என் வாழ்க்கையின் பெரும்பங்கை இப்படியெ கழித்துவிட்டேன். இப்பொழுதும் இப்படித்தான் வாழ விரும்புகிறேன் என்றார் மூயிகா.

 • இவரோட சொத்து மதிப்பு என்ன?

 • உருகுவேயில் அதிபராக இருப்பவர் ஆண்டுதோறும் தமது சொத்து மதிப்பை வெளியிட்டாக வேண்டும். 2010ல் 1800 டாலர்தான் இவரது சொத்து. 1987ஆம் ஆண்டு வெளிவந்த வொக்ஸ்வாகன் பீடில் காருக்கான மதிப்பு. தற்போது தன் மனைவிக்கு சொந்தமான நிலம், டிராக்டர், வீடு ஆகியவற்றில் பாதியை சொத்தாகக் காட்டியிருக்கிறார். மொத்தமாக 2,15,000 டாலராம். இப்படியும் மனிதர்கள் அதிபர்களாக இருந்து ‘வரலாறு’ படைக்கின்றனர்!

  — Thanks to tamilone.india website

  Advertisements

  Leave a Reply

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  Change )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  Change )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  Change )

  w

  Connecting to %s