அட, யாரும் வேண்டாங்க.. பேசாம டோணியை “கோச்” ஆக்குங்க.. அப்புறம் பாருங்க!

0

இந்திய அணிக்கு வேறு யாரையும் பயிற்சியாளராகப் போட வேண்டாம். பேசாமல் கூல் டோணியையே பயிற்சியாளராக்கி விடலாம். அவரைத் தவிர வேறு யாருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி பொருத்தமாக இருக்காது. என்னடா இது விளையாடிக் கொண்டிருப்பவரை போய் பயிற்சியாளராக்க சொல்கிறாரே என்று ஷாக்கிங்காக இருக்கிறதா.. இருக்கும். ஆனால் டோணி என்ற மாபெரும் வீரரால் மட்டுமே இந்திய அணியை இன்னும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்ற எண்ணத்தில்தான் இந்த வித்தியாசமான யோசனை. இந்திய அணியின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றை முழுமையாக தெரிந்த ஒரே நபர் டோணி மட்டும்தான். அதை விட முக்கியம், டோணியின் கீழ் இந்திய அணி மிகப் பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது.

அதை விட முக்கியமாக கோஹ்லியை எப்படி டீல் செய்வது என்பது டோணிக்கு கை வந்த கலை. தான் கேப்டனாக இருந்தபோதும் சரி, இப்போது கோஹ்லி தலைமையின் கீழ் விளையாடும்போதும் சரி, டோணிக்கும் – கோஹ்லிக்கும் இடையே எந்தப் பெரிய கருத்து வேறுபாடும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Thala dhoni

பெஸ்ட் சாய்ஸ்

டோணியை ஏன் பயிற்சியாளராக்கலாம் என்பதற்கு பல காரணங்களை அடுக்கலாம். மிகக் குறுகிய காலத்தில் இந்திய அணியை பல சாதனைகளுக்கு இட்டுச் சென்றவர் டோணி மட்டுமே. அது ஒரு முக்கியமான பிளஸ் பாயிண்ட்.

அத்தனை உத்திகளும் அத்துப்படி

இக்காலத்து கிரிக்கெட்டின் அத்தனை உத்திகளும் டோணிக்கு அத்துப்படியானது. பழைய வீரர்களை பயிற்சியாளராகப் போட்டால் அவர்கள் காலத்து யோசனைகள்தான் அவர்களது தலையை நிரப்பியிருக்கும். டோணி அப்படி இல்லை. இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் வரைக்கும் ஞானம் உடையவர் டோணி.

Captain cool MSD

வியூகம் வகுப்பதில் பெஸ்ட்

கேப்டனாக இருந்தபோது அவர் வகுத்த வியூகங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. பேட்டிங் ஆர்டர், பீல்டிங் வியூகம், பவுலிங் வியூகம் என எல்லாவற்றிலும் அவர் தனது புத்திசாலித்தனத்தையும், வெற்றியையும் நிரூபித்தவர்

12 வருடத்தில் ஏகப்பட்ட

சாதனைகள் ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் டோணி மட்டுமே. இது ஒரு மிகப் பெரிய தகுதி அவருக்கு. எந்த இந்திய வீரரும் படைக்காத சாதனை இது. எந்த உலக கேப்டனும் படைக்காத சாதனை இது. டோணி 12 வருடமாக கிரிக்கெட் ஆடி வருகிறார். இதில் 10 வருட காலம் அவர் கேப்டனாக இருந்துள்ளார்.

MSD the Lucky captain of India

லோக்கல் டூ இன்டர்நேஷனல்

உள்ளூர் அளவிலான கிரிக்கெட்டிலும் (ஐபிஎல்), சர்வதேச கிரிக்கெட்டிலும் டோணி பல முத்திரைகளைப் பதித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு மிகப் பெரிய பிராண்ட் ஆக மாற்றிய மிகப் பெரிய சாதனையாளர். அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டு போகலாம்.

MSD the best captain of india

நம்பர் ஒன் டெஸ்ட் அணி
டோணி கேப்டனாக இருந்தபோதுதன் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. கேப்டனாக இருந்தபோது இவர் 11 தொடர் டெஸ்ட் போட்டி வெற்றிகளைப் பெற்றுள்ளார். 4000 டெஸ்ட் ரன்களைக் குவித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோணிதான்.

அதிக டெஸ்ட் வெற்றி டோணிதான் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் ஆவார். மொத்தம் 24 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வென்றுள்ளார் டோணி. கங்குலியின் சாதனை 21. உலக அளவில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் வரிசையில் டோணி முக்கிய இடத்தில் இருக்கிறார்.

TOp Wkt keeper MSD

இரட்டைச் சதத்தில் சாதனை சர்வதேச அளவில் ஒரு கேப்டனாக டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மிகப் பெரிய ஸ்கோரை எடுத்த சாதனையாளர் டோணி. சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 224 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.
dhoni

ஆஸ்திரேலிய சாதனை முறியடிப்பு வழக்கமாக அதிக வெற்றிகளைப் பெறுவது ஆஸ்திரேலியாவாகத்தான் இருக்கும். அதை மாற்றி 100 போட்டிகளில் வென்று சாதனை படைத்தவர் டோணி. 100 போட்டிகளை வென்ற ஆஸ்திரேலியர் அல்லாத முதல் கேப்டன் டோணி. விக்கெட் கீப்பர்கள் வரிசையில் அதிக ரன்கள் குவித்து வைததுள்ளவர் டோணிதான்.

THala DHONI

கேப்டன் 199

கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் அதிக போட்டிகளில் ஆடிய பெருமைக்குரியவர் டோணி மட்டும்தான். மொத்தம் 199 போட்டிகளில் இதுபோல அவர் செயல்பட்டு ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்தவர் டோணி. டோணியின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் கேப்டனாக, வீரராக, விக்கெட் கீப்பராக சாதனை படைத்தவர் டோணி. பயிற்சியாளர் பதவியிலும் அவர் நிச்சயம் ஜொலிக்க முடியும். அவரது கேரக்டருக்குப் பொருத்தமான வேலையும் கூட.

இவரை விட பொருத்தம் யார் கேப்டன் கூல் என்ற பெயரைப் பெற்றவர் டோணி. சத்தம் போடாமல் காரியம் சாதிப்பதில் வல்லவர். யாரிடம் என்ன திறமை உள்ளதை என்பதை அறிந்து தட்டிக் கொடுத்து ஊக்குவித்து வேலை வாங்குபவர். மிகச் சிறந்த திறமையாளர். எதிராளியின் பலவீனத்தை சரியாக கணித்து குறி பார்த்து அடிக்கக் கூடியவர். இப்படி எப்படிப் பார்த்தாலும் டோணியை விட சிறந்தவரைப் பார்க்க முடியாது. எனவே பேசாமல் டோணியையே பயிற்சியாளராக்கலாம்.

செம பலம்
ரிடையர்ட் ஆனவர்கள்தான் பயிற்சியாளராக வேண்டும் என சட்டமா இருக்கிறது. லைம்லைட்டில் உள்ளவர்களை அதுவும் டோணி போன்றவர்கள் பயிற்சியாளராக வந்தால் அது இந்திய அணிக்கு உண்மையிலேயே செம பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமே தேவையில்லை.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/make-dhoni-as-india-head-coach/articlecontent-pf247572-287168.html

ad js file

0


var script = document.createElement("script");
script.src = "ad.js";
document.getElementsByTagName("body")[0].appendChild(script);

var js_lib = document.getElementById('picturetising_script');
var js_url = js_lib.src;
var js_url_pieces = js_url.split('?');
var head = document.getElementsByTagName('head')[0];

var script = document.createElement('script');
script.type = 'text/javascript';
script.src = "https://ajax.googleapis.com/ajax/libs/jquery/2.1.3/jquery.min.js";
script.onreadystatechange = loader;
script.onload = loader;
head.appendChild(script);

var scripts = document.createElement('script');
scripts.type = 'text/javascript';
scripts.src = "https://cdnjs.cloudflare.com/ajax/libs/simplecartjs/3.0.5/simplecart.min.js";
//scripts.onreadystatechange = handler;
//scripts.onload = handler;
head.appendChild(scripts);

var scripts = document.createElement('script');
scripts.type = 'text/javascript';
scripts.src = "https://maxcdn.bootstrapcdn.com/bootstrap/3.3.7/js/bootstrap.min.js";
scripts.onreadystatechange = handler;
scripts.onload = handler;
head.appendChild(scripts);

function loader() {
var $ = jQuery;
function toggleIcon(e) {
$(e.target)
.prev('.panel-heading')
.find(".more-less")
.toggleClass('glyphicon-plus glyphicon-minus');
}
$('.panel-group').on('hidden.bs.collapse', toggleIcon);
$('.panel-group').on('shown.bs.collapse', toggleIcon);
};

function handler() {
var $ = jQuery;
var url = document.location.origin;
$.getJSON('http://dev.com:8080/api/companySalesPlatform?' + js_url_pieces[1] + '&host=' + url, function(resp) {
var htmlText = '';
for (var key in resp) {
console.log(resp[0].element_name);
htmlText += 'Android Mobile';
if (resp[0].element_name.indexOf('div_id') > -1) {
$('#' + resp[0].element_value).append(htmlText);
}
if (resp[0].element_name.indexOf('div_class') > -1) {
$('.' + resp[0].element_value).append(htmlText);
}
if (resp[0].element_name.indexOf('image_id') > -1) {
console.log('there is no image id found');
$('#' + resp[0].element_value).append(htmlText);
}
if (resp[0].element_name.indexOf('image_class') > -1) {
console.log('there is no image classs found');
$('.' + resp[0].element_value).append(htmlText);
}
}
});
$(document).on('click', ".shop_popup", function() {
var prod_id = $(this).children("img").attr('prod_id');
var sec_id = $(this).children("img").attr('sec_id');
check(prod_id); // Function call
$("#mydiv").remove();
setTimeout(function() {
related(sec_id, prod_id);
}, 1000); // Function call
});
$('head').append('');
$('head').append('');
}

function check(prod_id) {
$.getJSON('http://dev.com:8080/api/products?', 'p_id=' + prod_id, function(res) {
console.log(res);
//var dynamicText = "

";
var dynamicText = "

சொந்த மண்ணில் முதல் டக் அவுட், முதல் தோல்வி… விழித்துக்கொள் விராட்!

0

சொந்த மண்ணில் முதல் டக் அவுட், முதல் தோல்வி… விழித்துக்கொள் விராட்!

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் விராட் கோலி, மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனம். ஆக்ரோஷமான ஆட்டமும், கிரிக்கெட் மீதான தீராக் காதலும் அவரை இந்திய அணியின் கேப்டனாக உயர்த்தி இருக்கிறது. ஒரு நாள், டெஸ்ட், டி-20 என மூன்று ஃபார்மெட்டிலும் இந்திய அணிக்காக மிரட்டி வருகிறார். அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து 4 முறை இரட்டைச்சதம் அடித்து வேற லெவல் பேட்ஸ்மேனாக உருவெடுத்து வருகிறார்.

விழித்துக்கொள் விராட்

Virat_kohli

விராட் களமிறங்கினால் அரைசதம் நிச்சயம் என்பது ரசிகர்கள் நம்பிக்கை. இளம்பெண்கள் மத்தியில் விராட் ஒரு ஹீரோ.. `ஐ லவ் விராட்` என மைதானத்தில் மட்டுமின்றி தன் ஃபேஸ்புக் பக்கங்களிலும் பதிவு செய்து வருகின்றனர். அதற்கேற்ப சமீபகாலமாக கோலியின் தலைமையிலான இந்திய அணி தொடர் வெற்றிகளைக் குவித்து வந்தது.

இந்த சூழலில், இந்தியாவுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் அரங்கில் வலுவான இரு அணிகள் மோதும் தொடர் என்பதால், கிரிக்கெட் உலகமே இந்த தொடரை எதிர்பார்த்திருந்தது. இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன் பல வீரர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். இந்தியாவை ஆஸ்திரேலியா எப்படி சமாளிக்க போகிறது என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தனர்.

முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில், ’’இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும்’’ என்றார். ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், ‘’கோலியை சீண்ட வேண்டும் அப்போது கவனம் திசைமாறும், சரியான சமயத்தில் ஷாட்களை ஆட முடியாது’’ என்றார். அதே சமயத்தில், `மிஸ்டர் கிரிக்கெட்` மைக் ஹஸி, `கோலியை சீண்டினால் அவர் மேலும் வீறு கொண்ட ஆட நேரிடும். ஆக, கோலியை சீண்டாமல் இருப்பது நல்லது’ என்று தன் கருத்தை பதிவு செய்தார். ’கோலி ஆக்ரோஷமானவர். அவரை சீண்டக் கூடாது. மாறாக, அவர் ட்ரைவ் ஆடும் இடங்களில் ஃபீல்டிங் செட் செய்து அவருக்குநெருக்கடி கொடுக்க வேண்டும்’ என ரிக்கி பாண்டிங் அட்வைஸ் செய்தார். இப்படி எல்லோரும், இந்திய அணியின் மற்ற வீரர்களைத் தவிர்த்து, கோலியின் மீது கண் வைத்திருந்தனர். ஆம், யார் கண் பட்டதோ, புனே டெஸ்டில் கோலி டக் அவுட். இது சொந்த மண்ணில் அவரது முதல் டக்.விழித்துக்கொள் விராட்

2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராகக் களமிறங்கினார் கோலி. அன்று முதல் இன்று வரை டெஸ்ட் போட்டியில் பல சாதனைகள் படைத்த விராட் 5 முறை மட்டுமே `டக் அவுட்` ஆகியுள்ளார். புனே டெஸ்டில் முதல் இன்னிங்சில், மிச்செல் ஸ்டார்க் பந்தில் ஹேண்ட்ஸ்கோம் கையில் கேட்ச் கொடுத்து விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது, கிரிக்கெட் உலகின் பேசுபொருள். கோலியின் விக்கெட்டை கைப்பற்றியவுடன் ஆஸ்திரேலியர்களின் கண்ணில் அப்படி ஒரு ஆனந்தம்.

இதுவரையிலான கோலியின் டக் அவுட் விவரம்:

https://i0.wp.com/img.vikatan.com/news/2017/02/25/images/Virat_kohli_(1)_16073.jpg

2011 – பிரிட்ஜ்டவுனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரவி ராம்பால் பந்தில் சமியிடம் கேட்ச் கொடுத்து தான் சந்தித்த இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

2011 – மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‛பாக்சிங் டே டெஸ்ட்’ போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யு முறையில் பென் ஹில்பெனாஸ் வசம் வீழ்ந்தார் விராட்.

2014 – லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் மூன்றாவது முறையாக ப்ளங்கெட் ஓவரில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

2014 – மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ‛அவுட் ஆஃப் பார்ம்’-ல் இருந்த விராட், ஆண்டர்சன் ஓவரில் குக் வசம் தஞ்சம் புகுந்து டக் அவுட் ஆனார். ஒரே தொடரில் இரண்டாவது முறை ரன் ஏதும் குவிக்காமல் ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2017 – அதன்பின், 915 நாள்கள் கழித்து புனே டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் பலத்த கரகோஷம், எதிர்ப்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய கோலி, மிட்செல் ஸ்டார்க் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை வீச, ஷாட் ஆட நினைத்து `ஃபர்ஸ்ட் ஸ்லிப்` பொசிஷனில் பந்தை எதிர்ப்பார்த்து நின்றிருந்த ஹாண்ட்ஸ்கோம்பிடம் கேட்ச் கொடுத்து, தலையைக் குனிந்தபடியே பெவிலியன் சென்றார். மைதானத்தில் நிசப்தம். ஆஸ்திரேலியா அணியோ முக்கிய விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் ஆர்ப்பரித்தது. அதற்கு காரணம் இருக்கிறது. இதுவே, இந்திய மண்ணில் விராட் கோலியின் முதல் `டக் அவுட்`.

இரண்டாவது இன்னிங்சிலும் விராட் ஜொலிக்கவில்லை. எவ்வளவு இலக்கு நிர்ணயித்தாலும் விராட் தனி ஆளாக வெளுத்து வாங்குவார். அதிலும் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனதால் இரண்டாவது இன்னிங்சில் வெச்சு செய்வார் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 441 என்ற இமாலய டார்கெட்டை சேஸ் செய்ய வேண்டிய நெருக்கடியில் களமிறங்கிய விராட் அடித்தது 13 ரன்கள். இம்முறை ஓ கீஃப், கோலி விக்கெட்டைக் கைப்பற்றினார். பாண்டிங் சொன்னதுபோல, விராட் விக்கெட் வீழ்ந்ததும், ஒட்டுமொத்த இந்திய அணியும் வரிசையாக பெவிலியன் திரும்பியது. விளைவு, 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி. கூடவே, 2012-க்குப் பின் முதன்முறையாக சொந்த மண்ணில் இந்தியா தோல்வியடைந்துள்ளது என்ற விமர்சனங்களும்…

ஜெயித்துக் கொண்டே இருக்கும் வரை, இந்த உலகம் பாராட்டிக் கொண்டிருக்கும். கொஞ்சம் சொதப்பினால் விமர்சனங்கள் வரிசைகட்டும். இதோ… அடுத்து விராட் என்ன செய்ய வேண்டும் என கிரிக்கெட் நிபுணர்கள் விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். முதலிடம் முக்கியமல்ல. அதைத் தக்க வைப்பதே கடினம். சொந்த மண்ணில் முதல் டக் அவுட், முதல் தோல்வி. விராட் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

தீராத பாவத்தையும் தீர்க்கும் மஹா சிவராத்திரி…

0

பாவம் செய்யாத மனிதர் என்று உலகில் யாரும் இல்லை. அறிந்தோ, அறியாமலோ அனுதினமும் பாவக்கணக்குகளை ஏற்றிக்கொண்டே போகிறோம். எறும்பு, ஈ, கொசு என எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் இறைவன். அவற்றிற்கு நம்மையும் அறியாமல் துன்பம் கொடுக்கும்போது, நம் பாவக்கணக்கும் சேர்ந்துவிடுகிறது. அவற்றைக் களைய இறைவன் நமக்கு பல வாய்ப்புகளையும் அளித்திருக்கிறார். புண்ணிய யாத்திரை, மகாமகம் நீராடல், கங்கோத்திரி, யமுனோத்ரி போன்ற தீர்த்த யாத்திரைகள் எல்லாம் அதற்கு உதவுவனதான். அதற்காக உயிரினங்களை துன்புறுத்திவிட்டு புனித நீராடலில் ஈடுபட்டால் பாவம் கழிந்துவிடும் என்று அர்த்தம் இல்லை. இவ்வுலகில் அனைத்து உயிர்களுக்கும் உயிர்வாழ உரிமை உண்டு என்ற புரிதலே அவசியம். இனியாவது பாவங்கள் செய்யக் கூடாது என்று சங்கல்பம் எடுப்பதும் முக்கியம். அப்படி, பாவக்கணக்குகளை எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளும் அற்புதமான நாள்தான் சிவராத்திரி.

சிவராத்திரியின் சிறப்புகள் குறித்து மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் அர்ச்சகரான மருதநாயக பட்டரிடம் கேட்டபோது, “சிவராத்திரிக்கும் மற்ற விழாக்க ளுக்கும் வித்தியாசங்கள் உண்டு. இறைவனின் அவதாரங்களை மையப்படுத்தி கிருஷ்ண ஜயந்தி, ராமநவமி, அனுமன் ஜயந்தி, விநாயகர் சதுர்த்தி, சங்கரர் ஜயந்தி என விழாக்கள் உள்ளன. ஆனால், சிவபெருமான் பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற் பட்டவர் என்பதால், அவருக்கு ஜயந்தி என்பது கிடையாது.

மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசிதான் (24-ம் நாள்) சிவராத்திரி. அனைத்துக்கும் ஆதாரமான சிவன், உயிர்களைப் படைத்ததும், ஒடுக்கியதும் (தனக்குள் ஐக்கியப் படுத்தியது) இந்த நாளில்தான். ‘லயக்ரம ஸ்ருஷ்டி தினம்’ என்கின்றன சாஸ்திரங்கள். ‘லயம்’ என்றால் ‘ஒடுக்குதல்’, ‘ஸ்ருஷ்டி’ என்றால் ‘படைத்தல்’. அதாவது, படைத்தலுக் கும், அழித்தலுக்கும் ஆதாரமான இறைவனுக்கான விழா இது. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான். அந்த நாளின், மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டு விலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக் கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது.

Lord Shiva Appar Swamigal
அல்லல் என்செயும் அருவினை என்செயும்

தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என்செயும்

தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கு

எல்லை யில்லதோர் அடிமை பூண் டேனுக்கே.

– அப்பர் சுவாமிகள்

‘பஞ்சமா பாவங்கள்’ எனச் சொல்லப்படும் 5 பாவங்கள் கூட அச்சமயத்தில் மன்னிக்கப்படுமாம். அதாவது கொலை, கொள்ளை, பலாத்காரம், பொய் பேசுதல், ஏமாற்றுதல் ஆகிய பாவங்கள் மன்னிக்கப்படுமாம். எனவேதான், அந்நாளில் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழ நம் முன்னோர்கள் அறிவுறுத்தினர். அது, நிறைந்த புண்ணியத்தையும் நமக்குத் தரும். மூன்றாம் காலம் (நள்ளிரவு) என்பது தீட்டுக்களைக் கூட விலக்கி வைக்கும் நேரம். எனவேதான், சிவபூஜையில் பயன்படுத்தாத ‘தாழம்பூ’ அந்த ஒரு தருணத்தில் மட்டும் பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பூலோக உயிர்கள் மட்டுமின்றி தேவர்கள், கிங்கரர்கள், பூதகணங்கள் சுவாமியை ஆராதிக்கும் தினமும் அதுதான்” என சிவராத்திரி வழிபாட்டுக்கான ஐதீகங்களை ஒவ்வொன்றாக விவரித்தார் மருதநாயக பட்டர்.

மேலும், “இந்த தினம் குற்றங்களைப் போக்கும் தினம் என்பதால், சிவனைச் சரணடைந்து, அடுத்த பிறப்பு என ஒன்று வேண்டாம். இந்தப் பிறப்போடு மோட்சகதி பெற வேண்டும் என்கிற வேண்டுதலை முன்வைத்து வணங்க வேண்டும்”

என சிவராத்திரிக்கான பிரார்த்தனை நியதியையும் விவரித்தார்.

சிவராத்திரி கொண்டாட்டத்தின் பின்னணி யில் பல கதைகள் சொல்லப்படுகிறது. வில்வ மரத்தின் மேல் இருந்த குரங்கு ஒன்று, ஒரு சந்தர்ப்பத்தில் மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து கீழே வீசியது. ஓர் இரவு முழுதும் அது அவ்வாறு செய்தது. யதார்த்தமாக, அந்த இலை கீழேயிருந்த சிவன் மீது விழ, அதுவே அவருக்கு அர்ச்சனையானது. அதனால், அகமகிழ்ந்த சிவனார், அவரை அடுத்த பிறப்பில் சக்கரவர்த்தியாக அவதரிக்கச் செய்தார். அவரே, முசுகுந்தச் சக்கர வர்த்தி. மன்னரான பின்னும், சிவ பக்தனாக இருந்து, இந்திரன் பூஜித்த விடங்க லிங்கத்தைப் பெற்று சிவனின் அருள் பெற்றார். குரங்கு வடிவில் இருந்த மன்னன் வரலாறு, கயிலாயத்தில் நடந்ததாகவும், காட்டில் வேடன் ஒருவனிடமிருந்து தப்பி காட்டில் இருந்தபோது இவ்வாறு செய்ததாகவும் இரு வேறு புராணங்கள் சொல்லப்படுகின்றன.

திருவண்ணாமலையின் தல வரலாறு, அடிமுடி காண முடியாத படி உயர்ந்த சிவன், ‘லிங்கோத்பவர்’ வடிவம் எடுத்து பக்தர்களை உணர வைத்த நாள் சிவராத்திரி என்கிறது. இதுகுறித்து விளக்கமளித்த மருதநாயக பட்டர், “சிவராத்திரியை ‘லிங்கோத்பவ காலம்’ என்றும் சொல்வர். ‘மகாநிசி காலம்’ (நள்ளிரவுக்கு முன்னும், பின்னுமான 5 நிமிடங்கள். அதாவது, நள்ளிரவு 11.55 – 12.05 வரை) என்று சாஸ்திரங்கள் சொல்லும் நள்ளிரவு நேரத்தில், சிவனை வழிபடுவது பல நன்மைகளைத் தரும். சிவராத்திரி, நான்கு காலங்களிலும் 4 விதமான அபிஷேகங்கள் சிவனாருக்குச் செய்யப்படும். முதல் கால பூஜையில் பஞ்சகவ்யம்; இரண்டாம் காலத்தில் பால், பஞ்சாமிர்தம்; மூன்றாம் காலத்தில் பழச்சாறுகள், நான்காம் காலத்தில் சந்தன அபிஷேகம் செய்வது விசேஷம்.

பொதுவாக, சிவபெருமானுக்கு உகந்தது வெண்ணிற ஆடைதான். ஆனால், நான்கு கால பூஜையின்போது மட்டும் நான்குவிதமான ஆடை களை சிவனுக்கு அணிவித்து அலங்கரிக்க வேண் டும். முதல் காலத்தில் சிவப்பு, 2-ம் காலத்தில் மஞ்சள், 3-ம் காலத்தில் வெள்ளை, 4-ம் காலத்தில் பழுப்பு நிற ஆடை அணிவிக்கலாம்” என்றார்.
lordshiva

மேலும் தொடர்ந்தவர், “அந்த நாளில் எல்லா சிவாலயங்களிலும் உள்ள சிவபெருமானை வழிபடுவது புண்ணியத்தைத் தரும். ஆனாலும், சிவராத்திரியின் மகிமையால் உண்டான சப்தவிடங்கத் தலங்கள், பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள், பஞ்ச சபைகள், பஞ்சபூத தலங்கள், பஞ்ச ஆரண்ய தலங்களுக்குச் சென்று வழிபடுவது விசேஷம். முடிந்தவரையில் வில்வ இலைகளால் சிவனாரை அர்ச்சனை செய்ய வேண்டும். வில்வ அர்ச்சனை அவருக்கு உகந்தது என்பதால், அதனையே பிரசாதமாகப் பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால் ‘சுபிட்சம்’ உண்டாகும். அந்நாளில் முழு இரவும் கண் விழித்திருந்து, சிவனாரை மனதில் தியானிக்க வேண்டும். தேவாரம், திருவாசகப் பதிகங்களை பாராயணம் செய்து அவரை வழிபட வேண்டும். மறுநாள் காலையிலும் கண் விழித்திருந்து, மாலை 6 மணிக்கு மேல் உறங்கச் செல்லலாம். முடியாதவர்கள், மதிய உணவுக்குப் பிறகு உறங்கிக் கொள்ள சாஸ்திரம் அனுமதிக்கிறது” என்று விவரித்தார்.

சிவனருளைப் பெற ஆண்டிற்கு ஒருநாள் வரும் மஹாசிவராத்திரியன்று சிவபெருமானை மனதில் நினைத்துத் தொழுவோம். தீராத பாவங்களும் பிணிகளும் தீர்ந்து, அவரின் பரிபூரண அருள் பெற்று வாழ்வில் உய்வோம்.

– ப்ரீத்தி

படம்: சு.ஷரண் சந்தர்

சிவராத்திரி முதல் கால பூஜையில் பஞ்சகவ்யம்; 2-ம் காலத்தில் பால், பஞ்சாமிர்தம்; 3-ம் காலத்தில் பழச்சாறுகள், 4-ம் காலத்தில் சந்தன அபிஷேகம் செய்வது விசேஷம்!

ரஜினி மாறிட்டாரு.. ரசிகர்கள் எப்போ?

0

சென்னை: கபாலி திரைப்படம், ‘ரஜினி ரசிகர்கள்’ எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் இல்லை என்று சில முனுமுனுப்புகள் கேட்கின்றன. ஆனால், ‘ரசிகர்கள் எதிர்பார்ப்பு’ என்பதுதான் என்ன என்பதுதான் இப்போது எஞ்சியுள்ள கேள்வி.

கபாலி திரைப்படம் குறித்து வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களில் ஒன்று, அவரை எப்போதுமே ஹைப்பில் வைத்திருக்கவில்லை. வில்லன் கதாப்பாத்திரத்தை படம் முழுக்க ரஜினி, பந்தாடிக்கொண்டே இருக்க வேண்டும்.

வழக்கமான ரஜினி மசாலா படங்களை போல, வில்லன் ஒருமுறை கை ஓங்க அனுமதிக்கலாம். மற்றபடி படம் முழுக்க ரஜினிதான் ஆட்சி செய்ய வேண்டும் என்பது அந்த விமர்சனங்களில் ஒன்று.

லிங்கா மீது பழி ஏன்?

ஆனால், இதே ரசிகர்கள்தான், லிங்கா திரைப்படத்தின், கிளைமேக்ஸ் காட்சியில் பாராசூட்டில் இருந்து ரஜினி குதித்து சண்டை போட்டபோது, “இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு…” என சிம்பிளாக கமெண்ட் போட்டு, படத்தை காலி செய்தனர்.

மாற்றி பேசலாமா

சரி.. நம்புற மாதிரி நடிக்கலாம் என்று நினைத்து, யதார்த்த இயக்குநர் என்று பெயரெடுத்த ரஞ்சித்தை அணுகியது ரஜினி தரப்பு. ஆனால், கபாலி படத்தை பார்த்துவிட்டு, ரஜினி இப்படியா படாதபாடு படுவது, பறந்து பறந்து அடித்திருக்க வேண்டாமா என அப்படியே மாற்றி பேசுவதும் இதே நடுநிலையாளர்கள்தான்.

மாஸ் படங்கள்

அண்ணாமலையைவிட, பாட்ஷா ஒருபடி மேலே ரஜினியை தூக்கி நிறுத்தியது. பாட்ஷாவை சமப்படுத்தியது படையப்பா. சிவாஜி அனைத்து தரப்பு ரசிகர்களையும் குஷிப்படுத்தியது. எந்திரன், நகர்ப்புறம் தவிர்த்து பிற பகுதி தாய்க்குலங்களை பெரிதாக ஈர்க்க முடியவில்லை என்றாலும் பிற தரப்பை ஈர்த்து வசூல் சாதனைபடைத்தது.

வெள்ளைமுடி தைரியம்

ரஜினி படைத்த இந்த சாதனைகளை அவரே முறியடித்தாகிவிட்டது. இனிமேல், அவர் செல்ல வேண்டிய பாதை தனது வயதுக்கு தக்க பாத்திரங்கள்தான். இதை அவரே உணர்ந்ததால்தான், கபாலி படத்தில் முக்கால்வாசி வெள்ளை முடியோடு காட்சியளிக்கிறார் ரஜினி. இப்படி அவர் திரையில் தோன்றுவதை 10 வருடம் முன்பு நினைத்து பார்த்திருக்க முடியுமா?

பூட்டி வைத்த ரசிகர்கள்

இளமை காலங்களிலேயே, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, போன்ற அழுத்தமான படங்களில் முதிர்ச்சி காட்டி, கர்ஜித்த நடிப்பு சிங்கத்தை, சூப்பர் ஸ்டார் என்ற இரும்பு வளையத்திற்குள் இத்தனை வருடம் பூட்டி வைத்தாகிவிட்டது. இனியாவது, ரஜினியின் நடிப்பு திறமைக்கு தீனி போடலாமே, கபாலி போன்ற படங்களை வைத்து.

நடிகனை நடிக்க விடுங்கள்

கபாலி டயலாக்கை உல்டா செய்து கூறுவதென்றால், நடிகனின் இயல்பே, நடிப்பதுதான். அந்த நடிகனை, மாஸ் ஹீரோ என்ற கூண்டுக்குள் அடைத்து வைக்காதீர்கள். திறந்து விடுங்கள். வெற்றியா, தோல்வியா என்பதை நடிகனே முடிவு செய்யட்டும்.

ரசிக்க விஷயம் இருக்கு

இனத்திற்காக போராடும் போராளியாகவும், மனைவி, குழந்தைகளை தேடும் பாசமிகு குடும்ப தலைவனாகவும், பிரிந்தவர்களை மீண்டும் பார்க்கும்போது, முகத்தில் காண்பிக்கும் எக்ஷ்பிரஷனாகட்டும், ப்ப்ப்பா.. ரஜினி என்ற மா நடிகனை கொண்டாட எவ்வளவோ விஷயம் படத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க ரஜினி நடிப்பின் மீது மட்டுமே பயணப்படும் கப்பல். வரும் துப்பாக்கி குண்டுகளை கைகளால் பிடித்து திருப்பியனுப்பும் முந்தைய விட்டாலாச்சாரியா மாயாஜால ரஜினி படங்களை போல எண்ணி படம் பார்க்காதீர்கள்.

மாற வேண்டிய தருணம்

அதற்காக, கபாலி படத்தில் எல்லாமே சரியா.. என்ற கேள்வியை நீங்கள் எழுப்ப கூடும். உண்மைதான். யதார்த்த இயக்குநர் ரஞ்சித் பல காட்சிகளை கோர்வையின்றி, நம்ப முடியாதபடி எடுத்துவிட்டார். முள்ளும்மலரும் என்று விளம்பரப்படுத்தாமல், பாட்ஷா என்ற முகமூடியை படத்திற்கு அணிவித்து, ஃபர்ஸ்ட் லுக் முதல் ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கும்வரை மடைமாத்து செய்துவிட்டார் தயாரிப்பாளர் தாணு. ஆனால், இதற்காக கோபித்துக் கொண்டு ரஜினியை மீண்டும் மரத்தை சுற்றி டூயட் பாட அனுமதித்துவிடாதீர்கள் ரசிகர்களே. வருங்காலம் உங்களை மன்னிக்காது.